Monday, July 12, 2010

winway'e education volume 1-issue 7

1. வாசித்தல்
வாசிப்பு. சிறுவயதில் வாசித்தல் என்பது வளரும் பருவத்தில் நம் தோற்றப்பரிமானங்களை (மனதின்-mental personalities) நெறிப்படுத்த மிக மிக அவசியம். நான் சிறுவயதில் ஒரு கல்கி வாசி. கல்கியில் பல நெடு, குறு தொடர்கதைகளை, சிறுகதைகளை படித்திருக்கிறேன். அக்கதைகள் என்னில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிந்தனைகளை பண்படுத்தி ஒருமுகப்படுத்தியிருக்கின்றன.
35 ஆண்டுகளுக்கு முன் கல்கியில் வெளிவந்த சிறுகதை ஒன்று இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது. எனக்கு கதை சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், தரமான சிறுகதைகளை படைத்துதந்த கல்கியில் நான் படித்த பல நூறு சிறுகதைகளில், இச்சிறுகதை மிக முக்கியமான ஒன்று. காயப்படும் உணர்வுகளுக்கு புதுதெம்பூட்டி மருந்தளித்து மெண்மையாய் வருடிக்கொடுத்து என் மனதில் உற்சாகத்தை கொணர்ந்து வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை, சவால்களை சந்திக்க எனக்கு கற்றுக்கொடுத்த பல சிறுகதைகளுள் இதுவும் ஒன்று. நம்பிக்கையே வாழ்வு - இது அச்சிறுகதையின் தலைப்பல்ல, சுருக்கம் அல்லது கதை எழுதப்பட்ட நோக்கம்.
அக்கதையின் தலைப்பு:‘இயேசு வந்திருந்தார்’. ஒரு ஏழை நடைபாதைவாசி.அவன் மதத்தால் கிறித்துவன். கிறித்துமஸ் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவனுள் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. மனைவி மக்கள் ஏதுமில்லா நடைபாதைவாசியான அவனுக்கு பண்டிகை செலவுக்கு பணம் வேண்டுமென்ற சராசரி ஆசை, எதிர்பார்ப்புகளெல்லாம் கிடையாது. அவன் மனதில் இக்கிறித்துமஸுக்கு அவனுடைய தார்ப்பாலின் குடிலுக்கு இயேசு வருவார். அவன், நசுங்கிப் போன அலுமினிய குவளையில் தயாரித்து தரும் தேநீரை வாங்கி ஆசையுடன் அருந்துவார். இது அவனுடைய ஆழமான நம்பிக்கை. கதையின் முடிவில், அவன் நம்பிக்கைப்படி இயேசு வந்திருந்தாரா இல்லையா என்பது சரியாக எனக்கு ஞாபகமில்லை. ஆனால் நான் அக்கதை இவ்வாறுதான் முடிந்திருக்கும் என உறுதியாக எண்ணுகின்றேன். இயேசு வந்திருந்தார். அவன் அலுமினிய குவளையில் தயாரித்து தந்த தேநீரை அருந்தினார். சென்றார். இதுவே அக்கதைக்கு நான் கற்பித்துக்கொண்ட, கொடுத்த முடிவு. ஒருவேளை கதாசிரியரும் இதே முடிவை கொடுத்திருக்கலாம். எனக்கு தெரியாது.
நான் அச்சிறுகதைக்காக கொடுத்த முடிவு, அம் முடிவின் மீதான என்னுடைய ஆழமான நம்பிக்கை என் வாழ்க்கைப் பாதைகளை மிகச் சரியாகவே அமைத்துக் கொடுத்திருக்கிறது. நண்பர்கள் என்னை நேசிக்கும்படி உருமாற்றியிருக்கிறது. நியாயமான நம்பிக்கைகள், நமக்குத் தேவையான அனைத்தையும் நம் முன் கொணர்ந்து தரும். உள்ளேயும் மாற்றங்களை, புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும்.
நம்பிக்கை. இது சத்தியத்தின் பல பரிமாணக்கூறுகளில் ஒன்று. வாழ்வின் ஆதார சக்கரம். ஆகவே தன்னம்பிக்கை தரும் நல்ல புத்தகங்களை, வார, மாத இதழ்களை வாங்கி வாசியுங்கள். படியுங்கள் உங்கள் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அவைகளில் அடங்கிக் கிடக்கின்றன. அவைகள் பொக்கிஷப் பேழைகள். தேர்ந்தெடுத்து திறந்து பாருங்கள். வேண்டியன எல்லாம் கிடைக்கும். படித்தால் மட்டும் போதாது. வாழ்வின் சவால்களை சந்திக்க தயாராகுங்கள். அப்போதுதான் வெற்றிமாலைகள் உம்மைத்தேடி வரும்.

2. நம் இந்திய அரசு

இந்திய அரசு என்பது இந்திய ஐக்கிய அரசை குறிக்கும். இதை மத்திய அரசு எனவும் அழைக்கிறோம். மத்திய அரசு, அரசியல் நிர்ணய சட்டத்தால் உருவானது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களால் உருவானது இந்தியா எனப்படும் பாரதம். மொத்தத்தில், இது இந்திய குடியரசு என அழைக்கப்படுகிறது. இந்திய அரசு மையம் புது தில்லியில் உள்ளது. நீதி மையமாக உச்ச நீதி மன்றமும், 21 உயர் நீதிமன்றங்களும் ஏனைய சிவில், குற்ற மற்றும் குடும்ப நல நடுவர் மன்றங்களும் பாரதத்தில் உள்ளன. சர்வதேச நீதிமன்றத்தின் நீதித்துறை பரிந்துரைகளை இந்திய அரசு 73ஆவது, மற்றும் 74 ஆவது அரசியல் நிர்ணய சட்டமாற்றி அமைத்தலின் மூலம் ஏற்றுக்கொண்டது.
அரசு நிர்வாகம் மூன்று முக்கிய கிளைகளை கொண்டது.
1. நிர்வாகத்தின் மூத்த தலைமையாக இருப்பது குடியரசுத்தலைவர் ஆவார். குடியரசுத்தலைவர் நேரிடையாகவோ அல்லது தமது அலுவலகங்கள் மூலமோ அல்லது தமது அதிகாரமையத்துக்குட்பட்ட அமைச்சர்கள் மூலமாகவோ செயல்படுகிறார்.
2. பாராளுமன்றம் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு பிரிவுகளாக இயங்குகிறது.
3. இந்திய தண்டனை சட்டம் (Indian Procedure Code) மற்றும் சிவில், குற்ற ஒழுங்குமுறை சட்டங்களையும் நிர்வகிக்க பாராளுமன்ற நடைமுறையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
4. 73 ஆவது, மற்றும் 74 ஆவது அரசியல் நிர்ணய சட்ட திருத்தல் மசோதாக்கள் மூலம் உள்ளாட்ச்சிப் பொறுப்புகளை பஞ்சாயத் ராஜ் சட்டம் நிறைவேற்றுகிறது.
5. அரசியல் நிர்ணயப்படி இந்தியாவின் முழுப்பெயர் சவரன் சோசியாலிஸ்ட் செக்யூலர் டெமாக்ரடிக் ரிபப்ளிக்.


3. இந்திய நாணய சட்டம்

1906 ஆம் ஆண்டு, இந்திய நாணய சட்டம் இந்திய நாட்டு பண்ட மாற்றுக்கான தேவையான நாணயங்களை வெளியிடுவது இந்திய அரசாங்கமே. நாணயங்களின் வடிவ அமைப்பு அச்சிடுதல் ஆகியவை மும்பை, அலிபூர், சைஃபாபாத், செர்லாபள்ளி மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் நடை பெறுகிறது. RBI சட்ட விதிகளின் படி நாணயங்கள் மத்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்திற்கு விடப்படுகிறது. 1906- ஆம் ஆண்டு சட்டப்படி ரூ.1,000/- வரை நாணயங்களாக வெளியிட முடியும்.
RBI யின் புழங்கு நிலையங்கள் நாட்டில் அகமாதாபாத், பெங்களூரு, பெலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, குவஹாதி, ஹைதராபாத், ஜம்மு, ஜெய்பூர், கான்பூர், கொல்கட்டா, லக்னோ, மும்பை, நாக்பூர்,நியூ டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. மேலும் நாடு முழுதும் 4422 கரன்சி மற்றும் 3784 சிறு நாணய டிப்போக்கள் உள்ளன.


 சில அடிப்படையான தகவல்கள்

1. 1934 ஆம் ஆண்டு சட்டப்படி ரூ.10,000/-க்கும் அதிகமான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வெளியிட முடியாது.
2. நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது மத்திய ரிசர்வ் வங்கியாகும்.
3. 1906-ஆம் ஆண்டு சட்டப்படி, மத்திய அரசிடம் நாணயங்களை வடிவமைப்பது மற்றும் வெளியிடுவது ஆகிய பொறுப்புகள் உள்ளன.
4. பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பொறுத்து பண நோட்டுகளை அச்சடிக்க புள்ளியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. 2 பில்லியன் நாணயங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
6. ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் / நோட்டுகள் மொத்தமாக அச்சிடப்படும் நாணயங்களில் 57 சதவிகிதம். ஆனால் மதிப்பில் 7 சதவிகிதமே. இதன் காரணம் என்னவென்றால் குறைவான அளவுள்ள நாணயங்கள் அதிக அளவு புழக்கத்தில் தேவைப்படுவதுதான்.
7. அழுக்கடைந்த நோட்டுகளை எந்த ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். முழு மதிப்பிலான பணம் திரும்ப கிடைக்கும்


4. CIRCULATORY SYSTEM
ரத்த ஓட்ட மண்டலம் ஆக்ஸிஜனை நம் உடல் முழுதும் கொண்டு செல்கிறது. ரத்த செல்களிலிருந்து ஆக்ஸிஜனைப்பெற்று உடலெங்கும் உள்ள திசுக்களைச்சுற்றியுள்ள திரவங்களுக்கு கொண்டு செல்கிறது. அதேபோல், திரவங்களிலிருந்து செல்கழிவுகளை பிரித்து ரத்த திசுக்கள் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரக தமனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இச்சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவே ரத்த ஓட்ட மண்டலத்தின் முக்கிய செயல்பாடாகும். செல்களின் வளர்ச்சிக்கும், தொடர்ந்த வளர்சிதை மாற்றங்களுக்கும் இந்த பிராணவாயுப்பகிர்வு தடையின்றி நடைபெற வேண்டும்.
விலங்குகளில் இருவகையான ரத்த ஓட்ட சுழற்சி உள்ளன. பல முதுகெலும்பற்ற உயிரின வகைகளில் ரத்த ஓட்ட மண்டலமே கிடையாது. சில உயிரினங்கள், தாங்கள் வாழும் சூழ்நிலையில் இருந்து நேரிடையாகவே பிராண வாயுவை எடுத்துக்கொண்டு கழிவுகளை செல் சுவர்களின் மூலமாகவே வெளியேற்றுமளவுக்கு மிக எளிமையான உடலமைப்பு கொண்டவையாக உள்ளன. பல அடுக்கு செல்கொண்ட சிக்கலான உடலமைப்பு பெற்றுள்ள விலங்கினங்கள்.
உயர் பிரிவில் உள்ள விலங்கினங்கள் இருவகையான பிரதான ரத்த ஓட்ட மண்டலங்களை கொண்டவை.

Open Circulatory Systems:

ஆர்தோபாட்கள் மற்றும் மொல்லஸ்க்குகள் திறந்த ரத்த ஓட்ட மண்டலத்தைக்கொண்டவை. மனித உடலில் இருப்பது போல இம்மண்டலப்பிராணிகளில் உண்மையான இருதயமோ தந்துகிக்குழல்களோ கிடையாது. பதிலாக ரத்த கூறுகள் ரத்தத்தை கடத்துகின்றன. இத்தமனிகள் ரத்தக்குழிகளில் இணைகின்றன. ரத்தக்குழிகள் ரத்தத்தை மீண்டும் ‘பம்ப்’ செய்து ரத்த திசுக்களுக்கு அனுப்புகின்றன. பூச்சிகளின் உடலில் உள்ள ரத்த திசுக்களுக்கு உடலின் வெளியே திறக்கும் ஸ்பிரேக்கிள்ஸ் எனப்படும் திறப்புகள் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்கின்றன.

Closed Circulatory Systems:

சில மொல்லஸ்குகளில் மற்றும் மேம்பட்ட பிரிவிலுள்ள முதுகெலும்புள்ள மற்றும் அற்ற உயிரினங்களின் மூடிய ரத்த ஓட்ட மண்டலங்கள் மிகச்சிறப்பாக வேலை செய்யும் தன்மை வாய்ந்தவை. இவைகளில் ரத்தம் மூடிய தமனிகள், நாளங்கள் மற்றும் தந்துகிகள் மூலம் ரத்தம் செலுத்தப்படுகிறது. தந்துகிகள் உறுப்புகளினூடே செல்வதால், எல்லா செல்களும் தங்கள் கழிவுகளை வெளியேற்றவும், புதிய ரத்தத்தின் மூலம் தேவையான சத்துக்களை பெறவும் ஏதுவாகிறது.


5. இந்த மாத நாடு

பெல்ஜியம் BELJIUM

நெதர்லேண்டின் காலனி ஆதிக்கத்திலிருந்து 1830-ல் சுதந்திரம் பெற்றது பெல்ஜியம். இந்நாடு முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப்போரிலும் ஜெர்மனியால் ஆக்கிரமிப்புக்குள்ளான போதிலும் கடந்த ஐம்பது வருடங்களில் அதன் வளர்ச்சி தொழிற் துறையிலும் நவீனமயமாக்கலிலும் பிரம்மாண்டமாக தெரிகிறது. இந்நாட்டின் எல்லைகளாக ஃப்ரான்சு, ஜெர்மனி,லக்ஸம்பர்க் மற்றும் நெதர்லேண்ட்ஸ் ஆகியவை உள்ளன.

அதிகாரபூர்வமான பெயர் Kingdom of Belgium அல்லது Belgium

நாட்டின் சர்வதேச அடையாள குறியீடு be

நேர மண்டலம் Central European Time (CET)

தலை நகரம் (ப்ரஸல்ஸ்) Brussels

மற்ற நகரங்கள் ஆன்ட்வெர்ப், ப்ரக்கீ, சார்லிராய், கென்ட், லீஜ், நமூர், வெர்வியர்ச், வாடர்லூ

அரசு சுதந்திரம் பெற்றது. முடியாட்சியுடன் கூடிய பாராளுமன்ற மக்களாட்சி

புவியியல் அமைப்பு அமைவிடம் மேற்கு ஐரோப்பா

பரப்பளவு: 30,553 சதுர கிலோமீட்டர்.

தட்ப வெப்பநிலை: சராசரி தட்பவெப்பநிலை மற்றும் குளிரான கோடைகாலம்,ஈரமான மற்றும் மேகக்கூட்டத்துடன் கூடிய வானிலை

மக்கள் நாட்டு மக்கள் பெல்ஜியன் என் அழைக்கப்படுகிறார்கள்.

மக்கள் தொகை: 10.3

தனி மனித வருமானம்: வருடத்திற்கு 31,549 டாலர்கள்

மதம்: 20% ரோமன் கத்தோலிக்கர்கள்

ப்ரொடெஸ்ட், யூதம், இஸ்லாமிக், ஆங்க்ளிகன், க்ரீக் மற்றும் ருஷ்யன்

மொழி: ட்ச்சு, ஃப்ரென்ச், ஜெர்மன்

பரப்பளவில் மொத்தம் 58% டச்சு மொழி பேசும் மக்கள், ஃப்ரென்ச் மொழி பேசும் மக்கள் 32% இருமொழியும் பேசும் பகுதிகள் 9.3% (ப்ரஸ்ஸல்ஸ்)

ஜெர்மன் மொழி பேசும் மக்கள் 0.7%

கல்வி 98%

இயற்கை வளங்கள் நிலக்கரி, இயற்கை எரிவாயு, கட்டுமானப்பொருள்கள், சிலிகா, கார்பொனேட்டுகள்

விவசாயம் சர்க்கரை வள்ளி, ஃப்ரெஷ் வெஜிடபிள், பழங்கள், தானியங்கள், புகையிலை, பீஃப், பன்றி இறைச்சி, பால்

தொழில் இயந்திரவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், உலோகப்பொருட்கள், வாகன ஒன்றிணைப்பு, வேதிப்பொருட்கள், ஆடைகள், கண்ணாடி, பெட்ரோலியம்

பணம் யூரோ

6. அறிவியல் உலகம்.எத்தனை எத்தனை விந்தைகளை உயிரியலுலகம் பெற்றுள்ளது?
பாக்டீரியாக்கள் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் தங்கள் தகவமைப்புகளை மாற்றிக்கொள்வதுடன் எதிர்கால சூழ்நிலை மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்றாற்போல் தங்கள் தகவமைப்புகளை திட்டமிட்டுக்கொள்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? நாம் வளமான வாழ்வு வாழ எப்படி திட்டமிடுகிறோமோ அதே போலவே பாக்டீரியாக்களும் திட்டமிடுகின்றன. இது மணியோசை கேட்டவுடன் நாய்களின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பாவ்லோவ் பரிசோதனை முடிவுகளுடன் ஒத்துபோகிறது.
நம் உடலின் சீரணக்குழாயின் வழியே உட்செல்லும் E.coli எனப்படும் பேக்டீரியாக்கள் தம்மைச்சுற்றி என்ன நிகழவிருக்கின்றன என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியைப்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றினுள் செல்லும் மேற்சொன்ன பேக்டீரியா, லேக்டோஸை உட்கிரஹிக்கிறது. பின் மால்டோஸ் என மாறி மாறி தத்தம் ஜீன்களில் உறிஞ்சிக்கொள்கின்றன. லேக்டோஸை உறிஞ்சியபின் மால்டோசை உறிஞ்சிக்கொள்ள உடனே இவை தயாராகிவிடுகிறது.
 
7. மரபியல் அடிப்படைகள் (Fundamentals of Genetics)

பால் பண்ணைகளில் பசுக்கள் அதிகமாக பால் கறக்கின்றன. பல வண்ணங்களில் பூக்கள் உற்பத்தி செய்யப்படுவதும் சுரைக்காய்கள் பல வடிவத்தில் காய்ப்பதும் எவ்வாறு?. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் ஒன்றே. மரபியல் கோட்பாடுகளின் செயல்வண்ணங்கள்தான்.
ஆம். ஜீன்கள்தாம் மரபியல் பண்புகளை உயிரினங்களின் சந்ததிகளுக்கு வழி வழியாக கடத்துகிறது! ஜீன்களின் அடிப்படை DNA ஆகும். இம்மூலக்கூறே ஒரு உயிரினத்தின் உடல் கட்டுமானத்திற்கு தேவையான எல்லா தகவல்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இதைப்பற்றி நீங்கள் பள்ளி வகுப்பிலேயே படித்து வருகிறீர்கள். முதலில் DNA என்றால் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள். பல செல்களாலான எல்லா உயிரினங்களும் அதன் செல்களிலேயே DNA மூலக்கூறுகளை கொண்டுள்ளன. DNA-க்கள் உயிரினங்களின் வடிவ செயற்பாடுகளை மட்டும் தீர்மானிப்பதில்லை. எல்லாவிதமான உயிர்களுக்கும் அவைகளின் மரபியல் பண்புகளுக்கான அடித்தள அலகாக DNA க்கள் செயல்படுகின்றன. எப்போதெல்லாம் ஒரு உயிரினம் இனப்பெருக்கம் செய்கிறதோ அப்போதெல்லாம் DNA வின் ஒரு பகுதி சேய் உயிரினங்களுக்கு போய் சேருகிறது. முழு அளவிலோ அல்லது பகுதியாகவோ டிஎன்ஏ, உயிரினத்தின் சேய்களுக்கு கடத்தப்படுவதன் மூலம், இந்த மரபுப்பண்பு கடத்துதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் மூலம் உயிரினத்தின் தனித்தன்மைகள் தக்க வைக்கப்படுகின்றன அல்லது மேம்படுத்தப்படுகின்றன.

கழுதை, பூனை, மற்றும் நெல்லிக்காய் இவைகளுக்கு பொதுவான விஷயம் என்ன? டிஎன்ஏ தான். இவ்வுயிரின உடலில் எந்த பாகம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது இந்த டிஎன்ஏ வின் தனிப்பண்பு. இது தான் வைரஸ்கள் உடலின் எந்த பாகத்தை தாக்க வேண்டும் என்ற தகவல்களையும் அவைகளுக்குள் பொதித்து வைக்கிறது.

டிஎன்ஏ எல்லா உயிரின செல்களின் நியூக்ளியஸ்களிலும் காணப்படுகிறது. நியூக்ளியஸ்கள் உடைய செல்களாலான உயிரினங்கள் eukaryotes எனவும், நியூக்ளியஸ் அற்ற செல்களையுடைய உயிரினங்கள் prokaryotes எனவும் அழைக்கப்படுகின்றன. டிஎன்ஏ, யூகர்யோட்டுகளில் நியூக்ளியஸிலும் ப்ரோகர்யோட்டுகளில் செல்சைடோபிளாஸத்திலும் காணப்படுகின்றன.
ஒவ்வொரு உயிரினத்தின் டிஎன்ஏ மூலக்கூறுகளும் ஒருபடித்தானவை மட்டுமல்லாமல் அதன் எல்லா டிஎன்ஏக்களும் ஒன்று போல் நைட்ரஜன் அடிப்படையிலான மூலக்கூறுகளைக் கொண்டவை. இந்த மூலக் கூறுகளின் கட்டமைப்பு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடுகிறது.

இந்த மாறுபட்ட மூலக்கூறுகளின் கட்டமைப்புதான் உயிரினங்களின் ஒருபடித்தான சிறப்பியல்புகளை தீர்மானிக்கிறது. டிஎன்ஏ-வின் இன்னொரு மூலக்கூறுக்கட்டமைப்பு மேற்சொன்ன மூலக்கூறு கட்டமைப்பிலுள்ள தகவல்களை சரிபார்க்கிறது.

டி என் ஏ –வின் அமைப்பு

பெரும்பாலான செல்கள் மிகவும் சிறியவை. நம் உடலில் மட்டும் சுமார் 100 ட்ரில்லியன் செல்கள் உள்ளன. ஆனால் ஒரு செல்லில் உள்ள டிஎன்ஏ-வை மட்டும் நீட்டி வைத்துப்பார்த்தால் அது இரண்டு மீட்டர் நீளம் இருக்கும். அப்படியானால் டிஎன்ஏ எவ்வாறு அத்தனை சிறிய செல்லினுள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது? ஆம் சுருள் சுருளாக மடித்து வைக்கப்பட்ட வடிவில் டிஎன்ஏ, செல்லினுள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது.

குரோமேட்டின்
யூகர்யோட்களில் டி என் ஏ க்களை சுற்றி ஹிஸ்டோன்கள் எனப்படும் புரதம் சுற்றப்பட்டு செல்லினுள் அடக்கப்பட்டுள்ளது. இதுவே குரோமேட்டின் என அழைக்கப்படுகிறது.

நியூக்ளியோடைட்
ஒரு நியூக்ளியோடைட் என்பது ஒரு நியூக்ளியோபேஸ், ஒரு ஐந்து கார்பன் அணுக்களாலான சர்க்கரை மூலக்கூறு மற்றும் ஒன்றிலிருந்து மூன்று பாஸ்பேட் தொகுப்புகளாலானது. இத்துடன் சர்க்கரை மூலக்கூறுகளும் சேர்ந்து நியூக்ளியோடைடுகளை உருவாக்குகின்றன.
பாஸ்பேட் தொகுப்புகள் , சர்க்கரையின் கார்பன் அணுவரிசையின் 2,3 மற்றும் 5 ஆம் அணுக்களுடன் இணைந்து பிணைப்புகளை உருவாக்குகிறது.

நியூக்ளிக் அமிலங்கள்

நியூக்ளிக் அமிலங்கள் நியூக்ளியோடைடுகளின் பெரிய மூலக்கூறுகளாலானது. டிஎன்ஏ-வில், அடினைன் (Adinine) மற்றும் குவானைன்களாலான (Guanine) ப்யூரின் (Pyuurin) பொருள்களாலும், தையமின் (Thyamin) மற்றும் சைடோசைன்களாலும் (Saitoacin) ஆன பைரிமிடின் (Pyrimidin) பொருள்களாலும் ஆனவை. ஆர் என் ஏ-வில், தையமினுக்கு பதில் யுரேசில் (Uracil) இடம்பெறுகிறது.

8. இருபதாம் நூற்றாண்டு - இந்தியா சுதந்திர போராட்ட வரலாறு

ஹிந்து – ஜெர்மன் சதித்திட்டம் என்பது முதல் உலகப்போரின் போது ஆங்கிலேய அரசிற்கு எதிராக பல்வேறு படிகளில் நடைபெற்ற உலகளாவிய சுதந்திர போராட்ட வழிமுறைகளில் ஒன்றுதான். திட்டங்களுள் பங்கெடுத்த இயக்கங்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், அமெரிக்காவின் காடர் கட்சி மற்றும் ஜெர்மனியில் இருந்து இயங்கி வந்த இந்திய சுதந்திர போராட்டக்குழு ஆகியவையாகும். இத்திட்டங்கள் முதலில் ஐரிஷ் குடியரசு இயக்கமும், ஜெர்மன் வெளியுறவுத்துறையும், சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலுள்ள ஜெர்மன் தூதரக காரியாலயமும் மற்றும் ஒட்டொமான் துருக்கியும் இந்த திட்டங்களுக்கு பெரிதும் உதவின. இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, சிங்கபூர் முதல் இந்தியாவின் பஞ்சாப் வரை பரவியிருந்த ஆங்கிலேய படைகளில் கலவரங்களை உண்டாக்குவதே இதன் அடிப்படையாகும். 1915, ஃபிப்ரவரி மாதத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த சதித்திட்டம் இந்திய துணைக்கண்டத்தில் வெள்ளையர் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதின் முக்கிய நோக்கமாகும். காடரைட்டுகளின் இயக்கத்துள் ஊடுருவிய பிரிட்டனின் உளவுத்துறை, இத்திட்டத்தைப்பற்றி தமது அரசுக்கு செய்தியனுப்பியதால் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கலகம் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்டது. பிரிடிஷ் படைகளின் யூனிட்டுகளில் ஏற்பட்ட கலவரங்கள் ஒடுக்கப்பட்டன. இதே போன்று, 1915 –ல் நடைபெற்ற சிங்கப்பூர் கலகம், ஏன்னீ லார்சன் ஆயுத சதி, ஜுகன்டார் – ஜெர்மன் சதி ஆகியவை, காபூலை நோக்கிய ஜெர்மன் பயணம், கன்னாட் ரேஞ்சர் படைகளில் ஏற்பட்ட கலவரம் ஆகியனவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய கிழக்கில் நிலை கொண்டிருந்த ப்ரிடிஷ் இந்திய படைகளில் ஏற்பட்ட கலவரமும் இதில் ஒன்றாகும். இந்திய-ஐரிஷ்-ஜெர்மன் கூட்டு சதித் திட்டங்களை ஆராய்வதே பிரிடிஷ் அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்தது. 1917-ல், நடைபெற்ற ஏன்னீ லார்சன் ஆயுத சதி முறியடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க புலனாய்வுத்துறை பலரை கைது செய்தது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடைபெற்ற முக்கிய சதிவழக்குளில் லாஹூர் சதிவழக்கு மற்றும் ஹிந்து ஜெர்மன் சதி வழக்குகள் நீண்ட காலம் நடத்தப்பட்டன.
இரு உலகப்போர்களும் இந்திய சுதந்திர போராட்டங்களுக்கு உரமிட்டன. முதல் உலகப்போரின் இறுதிக்குள் ப்ரிடிஷ் ராஜ்யத்துக்கு எதிரான கலவரங்கள் அடக்கப்பட்டன. இருப்பினும், அவை எதிர்கால இந்தியாவைப்பற்றிய ப்ரித்தானியரின் பார்வையை மாற்றியமைத்தது. இதே போன்று இரண்டாம் உலகப்போரின் போது இந்திய தேசிய ராணுவம் உருவானது.
இந்திய தேசிய காங்கிரசிற்கு 1885-ல் அடித்தளமிடப்பட்டு வளர்க்கப்பட்டு அதிகபட்ச சுயாட்சி மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை கோரி வந்தது. இவ்வுணர்வெழுச்சி பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் உச்சத்திலும், மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் சற்று மிதமாகவும் இருந்தது. பெங்காலில் நகரங்களில் வாழ்ந்த மத்தியகுடி மக்களான பத்ரலோக் வகுப்பைச்சார்ந்த புரட்சியாளர்களும் பஞ்சாப்பை சேர்ந்த கிராமங்களை மற்றும் ராணுவ சமூகங்களை சேர்ந்தவர்களால் ஆங்கிலேய எதிர்ப்பு பேரியக்கம் நடத்தப்பட்டன.
1905 வங்காள பிரிவினை அரசியலில் பரவலான தாக்கங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேசியவாத கருத்துக்களுக்கு உரமிட்டது. 1900 களில் உருவான ஜுகந்தார், அனுஷிலன் சமிதி ஆகியவை சுதேசி மற்றும் புரட்சிகரமான சிந்தனைகளை மக்களின் மனதில் விதைத்தன. இதன் விளைவாக தீவிரவாத அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. இத்தீவிரவாத அரசியலால் பல அரசியல் படுகொலைகளும், கொலை முயற்சிகளும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1907 –ல் பெங்கால் கவர்னரான சர்.ஆன்ட்ரூ ஃப்ரேசரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. பின் 1912-ல் இந்திய வைசிராயான சார்லஸ் ஹார்டிங்கை கொல்ல நடந்த சதியை, டெல்லி - லாஹூர் சதித்திட்டம் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதில் முக்கிய பங்கெடுத்தவர் ஜுகந்தார் இயக்கத்தை சேர்ந்த ராஷ் பிஹாரி போஸ் ஆவார். ஆங்கிலேய காவல்துறை பெங்காலிலும், பஞ்சாபிலும் புரட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராஷ் பிஹாரி மூன்று வருடங்கள் பிடிபடாமலேயே இருந்தார்.
வங்காளத்தில், ஃப்ரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்ட சண்டிமாகூர் பகுதிகளில் தங்கியிருந்து இந்திய புரட்சியாளர்கள் வங்காளத்தையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களையும் சதிச்செயல்களையும் நிறைவேற்றினர். 1912-ல் இந்தியா வருகை தந்த ஜெர்மனியின் பட்டத்து இளவரசரிடம் புரட்சியாளர்களான ஜதின் முகர்ஜியும், நரேன் பட்டாச்சார்யாவும் தங்கள் சுதந்திர போராட்டங்களுக்கு ஆயுத உதவி தந்து உதவுமாறு கோரினர். கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்தியாவின் வட மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இஸ்லாமிய போராட்டக்காரர்களும் முதல் உலகப்போரின் துவக்கத்தில் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயருக்கெதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

9. நடப்பு செய்திகள்
1. China supercomputer named world's second-fastest

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என தகுதி பெறுவது அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள அமெரிக்க ஆற்றல் துறையின் ஜாகுவார் கம்ப்யூட்டர் ஆகும். அடுத்ததாக இரண்டாவதாக இடம் பெறுவது சீனாவின் தெற்கு சீனாவின் ஷென்சென் மாநிலத்திலுள்ள தேசீய அதிவிரைவு கணிணியகத்தின் நெபுலே கணிணித்தொகுப்பாகும் (Nebulae System).
சூபர் கம்ப்யூட்டர்கள் வானிலை ஆராய்ச்சியில் வரைபடங்களை தயாரிக்கவும், அணுவெடிப்பு பரிசோதனைகளை நிகழ்த்தவும், ஜெட் எஞ்சின்களை வடிவமைக்கவும் பயன்படுகிறது.

நாடு                                                                                         அதிவிரைவு
                                                                                                     கணிணிகளின்
                                                                                                      எண்ணிக்கை
அமெரிக்கா                                                                                   282
சீனா                                                                                                   24
ஐரோப்பா                                                                                       144
ப்ரிட்டன்                                                                                           29
ஜெர்மனி                                                                                           24
ஜப்பான்                                                                                             18
இந்தியா                                                                                              5

2. இஸ்ரேலுக்கெதிரான துருக்கியில் போரட்டம்.

துருக்கிய காசாவுக்கான உதவிக்கப்பல் மீது இஸ்ரேலிய தாக்குதலைக்கண்டித்து துருக்கியின் தலைநகரான அங்காராவில் 200-க்கும் அதிகமானவர்கள் பேரணி நடத்தினர். துருக்கிய உதவிக்கப்பலில் சுமார் 400 முதல் 600 வரை துருக்கியரும் 3-9 பேர் அமெரிக்கரும் இருந்தனர் என அமெரிக்க தூதரகம் கூறுகிறது. 

இஸ்ரேலில் கைதானவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பு. பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவியை மேற்கொள்ள 6 கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை கமாண்டோவினர் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 19 பேர் பலியாகினர். 682 பேரை கைது செய்து சிறைவைத்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் அத்துமீறிய இந்தச்செயலுக்கு சர்வதேச அளவில் எழுந்த நெருக்கடியை அடுத்து 42 நாடுகளைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் அரசியல் ரீதியாக பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கி விட்டதாக கருதப்படுகிறது. இத்தாக்குதல் அரபு நாடுகளிடையும் துருக்கியிடையும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இன்று இலங்கையும் இஸ்ரேலும் மனித உரிமை மீறலில் கொடிகட்டிப்பறப்பது தெளிவாகவே தெரிகிறது.

அத்தியாவசிய மருந்து மற்றும் மருந்துப்பொருள்களை காசாப் பகுதிகளுக்குள் அனுமதிக்க மறுப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்கிறது. மீண்டும் மீண்டும் இஸ்ரேலிய அரசிடம் WHO வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளது. மருத்துவ சிகிச்சை அளிக்கத்தேவையான X-ray இயந்திரங்கள், ஸ்கேன்னர்கள், பரிசோதனை கருவிகள் ஆகியவைகளும் மருத்துவசாலைகளுக்கு தேவையான மின்தூக்கிகளும் (Lifts) இதில் அடக்கம். இஸ்ரேல் அடிப்படைதேவைகளை நிறைவேற்றமட்டும் பொருள்களை காசா எல்லையை கடக்க அனுமதிக்கிறது. மின்சேமிப்பு பேட்டரிகளையும், மின்னனு கருவிகளையும் அனுமதிப்பதில்லை .காரணம் அவை ராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தபடும் என இஸ்ரேல் எண்ணுவதே! காசாவில் உடல் தேவைக்கு சரியான உணவின்றி சுமார் 10% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கருதுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல்களில் 40 பிரித்தானியர்கள் இருந்தனர் என லண்டன் தெரிவித்துள்ளது. உதவிப்பொருள்களை ஏற்றி வந்த சர்வதேச கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடுமையாக கண்டித்துள்ளார். அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடைகளை விதிக்கவேண்டும் என துருக்கி பிரதமர் கூறியுள்ளார்.


3. ஆப்பிரிக்கா

காங்கோ மக்கள் குடியரசின் ஒரு சில பகுதிகளில் வாழ்வியல் சூழ்நிலை மேம்பட்டு வருவதாக ஐ.நா. கூறினாலும், மற்ற இடங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. வட மற்றும் தெற்கு கிவு பகுதிகளில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. 2009-லிருந்து ஈக்வடார் மாகாணத்தில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது. சுமார் 1,14,000 பேர் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர். பலர் பக்கத்து நாடான காங்கோ குடியரசுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

4. 2030-க்குள் 1.32 கோடி பேர் புற்றுநோயால் கொல்லப்படும் அபாயம்.

2030 க்குள் புற்று நோய் 1.32 கோடிபேரை கொன்றுவிடும் என ஐ.நா வின் அமைப்பான சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இப்போது பணக்கார நாடுகள் மட்டுமல்லாமல் ஏழை நாடுகளும் கூட புற்று நோயால் பெரிதும் பாதிக்கப்படுவதாக இக்கழகம் கூறுகிறது. உலகம் முழுதும் 7.6 கோடி பேர் புற்றுநோயால் 2008-ல் இறந்திருப்பதாக அக்கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 56 % பேர் வளரும் நாடுகளில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிக பட்சமாக 16.1 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.8 லட்சம் பேர் மார்பகப்புற்று நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. LARGE HADRON COLLIDER
CERN-ன் பரிசோதனை முடிவுகள்

கடந்த மூன்று வருடங்களாக பூமியை ஊடுருவி வெளிவரும் பல பில்லியன் நியூட்ரினோக்களை ஆராய்ந்ததில், ஒரு ம்யூவான் நியூட்ரினோ (muon neutrino) டா நியூட்ரினோவாக (Tau neutrino) மாறியதை கண்டுபிடித்துள்ளனர். இது ஜெனீவாவில் அமைந்துள்ள CERN இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின் தகவல். பேரண்டம் உருவான வரலாற்றை அறிய இந்த மாற்றம் பற்றிய தகவல் எளிதாக உதவும் என மத்திய இத்தாலியில் அமைந்துள்ள க்ரேன் சேஸ்ஸோ (Gran Sasso laboratory) பரிசோதனைச்சாலையிலிருந்து வெளியிடப்பட்ட தகவல் கூறுகிறது. இக்கண்டுபிடிப்பு சூரியனிலிருந்து வரும் பெரும் எண்ணிக்கையிலான நியூட்ரினோக்கள் எவ்வாறு மிகக்குறைந்த அளவில் பூமியை அடைகின்றன என்பதற்கான ஆராய்ச்சியில் வெற்றிகரமான முன்னெடுப்பை தந்துள்ளது. நியூட்ரினோக்கள் தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொள்கிறது என்ற 1960-களின் இறுதியில் இரு மாஸ்கோ அறிவியலாளர்கள் வெளியிட்ட தகவல் இக்கண்டுபிடிப்பின் மூலம் உறுதியானது. இவர்களின் ஆய்வில் மேலும் பலவிதமான நியூட்ரினோக்கள் இருக்கலாம் எனவும் அவை ஆய்வில் கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர். சூரியனிலிருந்து பூமி நோக்கிவரும் நியூட்ரினோக்கள் மிகக்குறைந்த அளவில் உள்ளன என்று கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளரான ரே டேவிஸ்-க்கு இவ்வாராய்ச்சியில் நோபல் பரிசும் கிடைத்தது.

கரும் பொருள் (Dark Matter) கரும் ஆற்றல் (Dark Energy) விண்வெளியின் மொத்தப் பொருண்மையில் சுமார் 70 சதவிகிதம் என்பதை ஏற்கெனவே சென்ற இதழ்களில் கண்டிருக்கின்றீர். பேரண்டத்தின் இம்மறை பொருள்களைப்பற்றிய ஆராய்ச்சியில் CERN –ன், உலகின் மிகப்பெரிய பெரு ஹேட்ரான் மோதி (Large Hadron Collider) கடந்த மார்ச்சில் முழு வேகத்துடன் செயல்படத்துவங்கியது.

6. கௌதமாலா நகரில் தோன்றிய பெரும்பள்ளம்

பூமியின் மேலடுக்கு கடினமாக இருந்து கீழடுக்குகளில் உள்ள மண் மழை நீரால் நனைந்து மண்ணின் எடை அதிகமாகும் பொழுது கீழடுக்குகளில் உள்ள மண் பொருண்மை நொறுங்கி உள்பொதிந்துவிடுவதால் மேலடுக்கின் கீழ் வெற்றிடம் உருவாகிறது. மேலடுக்கு தன் எடை தாளாமல் நொறுங்கி தரைப்பரப்பில் பெரும் பள்ளம் அல்லது பெருங்குழி ஏற்படுகிறது.

இது போன்ற 60 அடி அகல 30 மாடி உயர குழி ஒன்று கௌதமாலாவில் சமீபத்தில் ஏற்பட்டது. இதற்கு தரைக்கு கீழ்செல்லும் கால்வாய்களும் ஒரு முக்கிய காரணம் புவியியல் வல்லுனர்கள்.

7. மத்திய கிழக்கு:
விரிவுபடுத்தப்படும் இரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலையங்கள்.

இரான் தொடர்ந்து யுரேனிய செறிவூட்டலுக்கான உபகரணங்களை மேம்படுத்தியும் அணுசக்திக்கான மூலப்பொருள்களை குவித்து வருவதும் மேற்கத்தைய நாடுகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி வருவது நாம் அறிந்தது. ஐ.நாவுக்கான சர்வதேச அணுசக்தி ஆணையம், இரான் குறைசெறிவூட்டிய யுரேனியத்தை 2.5 டன் அளவிற்கு குவித்துள்ளதாக கூறுகிறது. இரானோ தமது அணுசக்தி முழுதும் ஆக்கப்பூர்வ சக்திகளுக்கே பயன்படும். இரான் தற்போது 20% பரிசுத்த அளவிற்கு யுரேனியத்தை தயாரித்து வருகிறது. ஐ.நா பாதுகாப்பு மன்றம் இரானின் மீதான நான்காவது கட்ட பொருளாதார தடைகளைக் கொண்டு வருவதற்கு வரைவு தீர்மானத்தை தீட்டியுள்ளது. இருண்டவன் கண்ணுக்கு மருண்ட தெல்லாம் பேய் என்பது இதுதானோ?
8. லெபனான்
இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனான் மீது பறந்தபோது லெபனானின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் அவைகளின் மீது தாக்குதல் AFP செய்தி குறிப்பிடுகின்றது. 2006-ல் நடந்த போருக்குப்பின் இஸ்ரேலிய விமானங்கள் லெபனான் மீது அத்து மீறி அடிக்கடி பறப்பதாக லெபனான் குற்றம் சாட்டினாலும், இஸ்ரேல் ஆயுதங்கள் கட்த்தலை தடுப்பதற்காகவே வான் வழி கண்காணீப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என சமாளிக்கிறது.
9. மலை ஏற நம்பிக்கை ஒன்றே போதும்
51 வயதான கண் தெரியாத (குறைப்பார்வைத்திறன்)பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை செய்துள்ளார் (ABC news). இவர் ஐஸ்லேண்ட், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஸ்கூபா டைவிங் எனப்படும் பறக்கும் விமானத்திலிருந்து குதிக்கும் சாகசங்களை செய்தவர். ஆஃப்ரிக்காவில் சஃபாரி செய்துள்ள இவர் கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார். இவரை 15 வயதில் தாக்கிய இந்நோய் 30,000 பேரில் ஒருவரை தாக்கக்கூடியது என்றறியப்படுகிறது.
10. உயரப்பறக்கும் NASA-வின் SOFIA அகச்சிவப்பு தொலைநோக்கி

NASA- வின் புதிய அகச்சிவப்பு தொலைநோக்கி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உயரப்பறக்கும் ஜம்போ ஜெட் 747SP ஒன்றின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய துளையிலிருந்த விண்வெளியை எடுத்தப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த மே 26 -ல் எடுக்கப்பட்ட வியாழன் மற்றும் M82 திரள் கூட்ட மண்டலத்தின் பல் வண்ண அகச்சிவப்பு புகைப்படங்களும் வெளியாயுள்ளன. இப்புகைப்படங்கள் 35,000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்பட்டன. மணிக்கு 497 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது இவ்விமானம். இத்தொலை நோக்கியின் பெயர் SOFIA. 20 வருட ஆயுட் காலத்துடன் துவங்கப்பட்டுள்ள SOFIA தொலை நோக்கியால் பூமியிலிருந்து செய்ய முடியாத ஆராய்ச்சிகளை வானிலிருந்து செய்ய இயலும்.
SOFIA தொலைநோக்கி 100 அங்குல ஒளிவிலகல் அடிப்படையிலான அகச்சிவப்பு நிற தொலை நோக்கியாகும். இதன் எடை 17 டன்கள். ஆராய்ச்சியாளர்கள் தனியறை யிலிருந்து இந்த தொலை நோக்கியை இயக்குகின்றனர். இவ்வாராய்ச்சி திட்டம் NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆய்வு மையத்தின் ஒன்றிணைந்த ஆய்வுத் திட்டமாகும். காற்றிலுள்ள நீராவியின் சதவிகித அளவு 99% குறைவாக உள்ள உயரத்தில் விமானம் பறப்பதால் அக்ச்சிவப்பு நிற கதிர்கள் பெருமளவில் தொலை நோக்கியை எட்டுகின்றன. இவ்விமானத் தொலைநோக்கி கலிஃபோர்னியாவின் ட்ரைடன் விமான இயக்கு தளத்திலிருந்து ஏவப்படுகிறது.

வின்வே’ஸ் எஜுகேஷன் எண்:22, தந்தை பெரியார் நகர் முதல் தெரு,    அயன்புரம், சென்னை.23.

அன்புள்ள ஆசிரியப் பெருந்தகையினருக்கு வணக்கம்.

வின்வே’ஸ் எஜுகேஷன் மாத இதழ் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள். அயன்புரத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அரசு உதவி பெற்ற தனியார் மேல்நிலைப்பள்ளியிலும் வின்வே–யின் கல்வியிதழை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய எண்ணி இவ்விதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக வெளியிட எண்ணியிருக்கிறோம். எனவே அன்பு கூர்ந்து மாணவருக்கான இப்பணியை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு  மாத இதழின் இறுதிப்பக்கத்திலிலும் 35 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
2. எமது  மாத ஏடு கையில் கிடைத்த 30 நாட்களுக்குள், இதற்கான விடைகளை மாணவர்கள் A4 அளவுள்ள காகித்தாளில் எழுதி பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட வேண்டும்.
3. இரு மாதங்களுக்கு பிறகு திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்கள் வின்வேயின் வளைதளத்தில் வெளியிடப்படும். பள்ளிக்கு கடித வாயிலாக தெரிவிக்கப்படும்
4. கேள்விகள் பெரும்பாலும் ஒரிரு வரிகளில் விடையளிப்பனவாக அமைந்திருக்கும்.
5. மாணவர்கள் தேர்வை தங்கள் இல்லம் அல்லது வகுப்பறையில் அமர்ந்து எழுதிக்கொள்ளலாம்.
6. ஒவ்வொரு இருமாத தேர்விலும் முதலில் வரும் மாணவருக்கு பள்ளிக்கு ரூ.1,000/- பரிசாகவும் இப்பணம் அம்மாணவரின் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிக்கட்டணத்தில் ஒரு பகுதியாக பள்ளியில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும்.
7. மூன்றாம் வருட இறுதியில் அணைத்து மாணவர்களுக்கும் பொது அறிவில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்
8. அது மட்டுமல்லாது மேற்கண்ட பள்ளிகளில் வின்வே’ஸ் எஜுகேஷனின் தேர்வில் முதலாவதாக வரும் மாணவருக்கும், அவர் படிக்கும் பள்ளிக்கும் வானவியல் தொலைநோக்கி ஒன்று தலா பரிசாக வழங்கப்படும்.
9. பள்ளிகளில் முதலாவதாக வரும் மாணவர்கள், கொடுக்கப்படும் தலைப்புகளில் அறிவியற் கட்டுரைகளை எழுதி எமக்கு அனுப்பினால் பரிசீலிக்கப்படும்.
10. முப்பது நாட்களுக்கு ஒருமுறை விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, திருத்தப்பட்டு பிறகு வழங்கப்படும் மதிப்பெண்கள் எமது வலைதளத்தில் வெளியிடப்படும்.
11. மாணவர்கள் தங்கள் படிப்புத்திறன் மற்றும் படைப்புத்திறன் இரண்டும் இத்தேர்வுகளின் மூலம் பரிசோதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை அறிக்கையாக அனுப்பப்படும்.
12. மாணவர்களுடன்/மாணவிகளுடன் எந்த வித நேரடித்தொடர்பும் எமது நிறுவனம் வைத்துக்கொள்ளாது.
13. எமது கல்விக்கான இவ்விதழ் கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் புழக்கத்தில் உள்ளது
14 எங்களது இப்பணி சமூகம் சார்ந்த நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதற்கான மொத்த செலவு என்ன தெரியுமா? அறிமுகச்சலுகையாக மாதம் ரூ.40/- மட்டுமே.


Winway’s Education

Tariff for advertisement

I. Wrapper

Size Rates for multi colour advertisements
Front Half crown Rs.2500/-
Front Inner Half crown Rs.1500/-
Full Rs.3000/-
Back Inner Half crown Rs.1500/-
Full Rs.3000/-
Back Half crown Rs.2000/-
Full Rs.4000/-

II. Core
(Only four pages for advertisements)
Size Rates for black and white
Centre spread Full (two pages) Rs. 2000/-
Full page Rs. 1500/-
Half Page Rs. 750/-
 
FEATURES OF WINWAY'S EDUCATION
1. All common academical subjects
 2. Anthropology: Anthropology contains three sub topics a. anthropology, b. psychology & c. self development. Winway’s Education will update the currency of the topics wherever necessary 3. Countries:This topic is divided in to two topics, which are further divided in to many sub-topics. The two main topics of Winway’s Education are current affairs (countries- monthly follow up) and countries (social, cultural and geographical data etc.,)
4. Earth: this covers the physical earth study that encompasses the physical features of the world 5. News: this is another valuable focus of Winway’s Education as it contains both faces of the society where we live in -the good and the bad. The Winway’s Education motivates the reader to analyse the philosophical facts of the good and the bad. 6. Personalities: Both physical and mental personalities count for a successful living. We cover varieties of personalities under this subject from writers to dictators in history study. 7. Science: The major hub of the Winway’s Education is the study of science and its application. 8. Space
More than 200 topics and their sub topics cover almost all the brief wisdom the human being has earned so for. 9. Language: Tamil, English and Hindi sentence makers: A comparative study on Tamil, English and Hindi languages is presented along with the ancient Tamil history, culture, heritage, rulers, poets and other invaluable details. This comparative study begins with simple sentences of the three languages and their equivalents. Hence, the beginner can master all the three languages at a same time. This is one of the unique features of Winway’s Education's language sessions. :10. English: This section deals with the language developer prescribed by Winway’s specially prepared for the students who undergo schooling in Tamil and English medium. This is one of unique features of Winway’s Education conducted by Winway’s. 11. General Awareness & 12.General Knowledge are the unique topics of Winway’s Education.
“Since Winway’s Education has text value, preserve the magazine for future reference”
Winway’s Education,
22, First Street,
Thanthai Periyar Nagar,
Ayanavaram, Near Gopikrishna theatres, Chennai. 600 023,
Website: www.winwaysww.com,
Email: winwayseducation@gmail.com.
 blog : winway's 
Main subjects of the Winway’s Education

 CAMPUS EDUCATION
This portion covers all the texts that are taught in schools
The texts covered in campus education include syllabi of CBSE, MATRIC and STATE BOARD education
 ANTHROPOLOGY
Anthropology contains a. anthrop, b. psychology & c. self development
 COUNTRIES
This subject is divided in to two topics, which are further divided in to many sub topics. The two main topics of winways education ’s study are current affairs (countries- monthly follow up) and countries (social, cultural and geographical data etc.,)
 EARTH
This covers the physical earth study that covers the physical features of the world
 ENGLISH
This section deals with the language developer prescribed by the Winway’s Education specially prepared for the students who undergo schooling in Tamil and English medium
 GK
General knowledge session covers as many as 500 varied topics with utmost detail. The concept creator has conceived and handpicked these topics for enlightened wisdom.
 HINDI
This subject covers comparisons of Tamil, English and Hindi sentences. The comparative study starts from simple sentences of the three languages and their equalents. Hence, the beginner can master all the three languages at a same time. This is one of the unique features of Winway’s Education.
 NEWS
This is another valuable focus of Winway’s Education as it contains both the faces-the good and the bad-of the world we live in. the Winway’s Education is motivated to analyse the philosophical facts of the good and the bad.
 PERSONALITIES
Both physical and mental personalities count for a successful living. We cover varieties of personalities under this subject from writers to dictators.
 SCIENCE
The major hub of the Winway’s Education is the study of science and its application. Four major arenas of biology, chemistry, electronics and physics cover the vast knowledge into simple capsules
 SPACE
More than 200 topics and their sub topics cover almost all the wisdom the human being has earned so for.
 TAMIL
The culture, heritage, rulers, poets and other invaluable details are furnished along with the ancient Tamil history.


 
Winway’s , 22, Thanthai Periyar Nagar First Street, (Near Gopi Krishna Theatres), Ayanavaram, Chennai. 600 023.

Website: http://www.winwaysww.com/
Email ID: winwayseducation@gmail.com

Winway’s conditions for authors submitting articles for Winway’s Education

1. The write ups are to be submitted in handwritten sheets and sent to Winway’s, 22, Thanthai Periyar Nagar First Street, Ayanavaram, Chennai. 600 023.
2. All articles are to be submitted with full signature of the creator.
3. The director and editor of the Winway’s magazine holds the right to edit /re edit to suit to the needs of readership of Tamil nadu and other states.
 
WINWAY’S EDUCATION FOR RURAL & URBAN DEVELOPMENT

WINWAY’S EDUCATION

Phone: 044-26222556, Mobile: 9840479703,
www.winwaysww.com                                                email: winwayseducation@gmail.com


Sirs,

We, the Winway’s Education, have recently introduced a course namely Winway’s Education for the benefit of both rural & urban students.
The aim of the Winway’s Education is to train the students to greater educational standards without hindering their customized education. All articles appeared in Winway’s Education is of state board education, particularly for the students who undergo Tamil medium of instruction. Hence we thought of a proper supplementary education. The details of the course are as under.

We are not financially sound enough to conduct the course in more than one school at a time and neither we  intend to concentrate in more than five schools during the next two years. Hence at the introductory stage of Winway’s Education, we offer to conduct the course for five schools in around Ayanavaram.
Winway’s Education has commitments towards social integration through imparting quality education to students.


Winway’s Education
22,Thanthai Periyar Nagar First Street,Ayanpuram Chennai.600023


Winway’s has always dreamed of a stronger and brighter India. After a period of twenty and odd years of meditation in to the realities of conventional system of education, it is felt that we have slowly become handicap of many vital factors needed for attaining success in material and philosophical life. To fill the requisites for the achievement of our common goals, we have formulated a course to motivate and strengthen the younger minds with the tools they imminently want to restyle their career destiny. NOW WE ARE HERE emerging to bring OUR DREAMS in to action. 

Winway’s education
‘A novel approach in modernizing rural & urban education’

“¿¡É¢Äò¾¢ø ¿¡õ ¯ÂÃ, ¾Á¢Øõ ÅÇÃ, À¡Ã¾Óõ ÅÖô¦ÀÈ,
±ðÎ ¾¢ìÌõ ¦ºø§Å¡õ; ¸øÅ¢î¦ºøÅí¸û ¡×õ ¦¸¡½÷ó¾¢íÌ §º÷ô§À¡õ!”

Winway’s education, 22, Thanthai Periyar Nagar first street, Ayanavaram, Chennai.600 023.
“……The creator of this magazine is none but one among the millions of common Indian citizens who longed for G.K. & G.A education in school days. Though he is not of any special in any scholastic values, his goal and ambition in getting the fair education to the students is not really bad. In that way, he should be appreciated”                                                                                               ….his critic

No comments: